சென்னை வில்லிவாக்கம் அருகே தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து : படுகாயம் அடைந்த இருவருக்கு சிகிச்சை

Jul 2 2022 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வில்லிவாக்கம் அருகே தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பெயிண்ட் கலவைக்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் பேரல்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலை முழுவதும் கரும்புகைகள் எழும்பி புகைமூட்டமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00