சென்னையிலுள்ள சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸுக்கு சொந்தமான சுமார் 235 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
Jul 3 2022 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னையில் சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு செய்த பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததால், இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிக் கடன் பெற்று பணமோசடியில் ஈடுபட்ட புகாரில் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 234 புள்ளி 75 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.