லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்‍குச் சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்‍கம் - சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்‍கத்துறை நடவடிக்‍கை

Jul 3 2022 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

லாட்டாரி அதிபர் மார்ட்டினுக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம், சட்டவிரோத பணம் பரிமாற்றம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு சென்னை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கட்டாக பணம், நகை, பொருட்கள் உள்ளிட்டவை சிக்கின. அதன் அடிப்படையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 173 புள்ளி 48 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பு அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மார்ட்டினின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளாதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00