கன்னியாகுமரி மாவட்டம் அழிகல் கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றம் : 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்
Jul 3 2022 5:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் அழிகல் கடற்கரை கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பலத்த சூறைக்காற்று வீசியது. இதைத் தொடர்ந்து மாலையில், நாகர்கோவில் அடுத்துள்ள அழிகல் கடற்கரைக் கிராமத்தில் ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்தன. இதனால் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. அப்போது வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து வீடுகளைவிட்டு வெளியேறினர். பின்னர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
கடல் சீற்றத்தின்போது தங்களது கிராமம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்,
அரசிடம் இதுகுறித்து பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அழிகல் பகுதி மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.