தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 அலகுகள் நிறுத்தி வைப்பு - 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Jul 3 2022 12:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் 5 அலகுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு அலகில் 210 மெகாவாட் என 5 அலகுகளில் மொத்தம் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாகவே நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, அனல் மின் நிலையத்தில் முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவில் இருந்து அனல் மின் நிலையத்தில் ஒன்று மற்றும் ஐந்தாவது அலகுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இரண்டு, மூன்று மற்றும் நான்காவது அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தினமும் பகல் நேரங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், அனல் மின் நிலையத்தில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், மேலும் மின்தடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00