விழுப்புரத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்தி சென்ற இளைஞர் - திரைப்பட காட்சிகளை மிஞ்சும் வகையில் காரின் முன்பக்கம் தொங்கியபடியே சென்ற தங்கையை அக்கா மீட்ட பரபரப்பு சம்பவம்

Jul 3 2022 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரத்தில், தனது தங்கையை காரில் கடத்திச் சென்ற கணவரை, அவரது மனைவி, காரின் முன்பக்‍கம் தொங்கியபடியே சென்று மீட்ட பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. திரைப்படத்தை மிஞ்சும் இந்த காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷுக்‍கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த விஜயபானுவிற்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவப் படிப்பு பயிலும் விஜயபானுவின் தங்கையான விஜயமஞ்சுவை, வெங்கடேஷ் திருமணம் செய்ய முயன்று வந்துள்ளார். அக்கா விஜயபானு, தங்கை விஜயமஞ்சு ஆகியோர், நகை வாங்க விழுப்புரம் நான்குமுனைச் சந்திப்பு சாலை அருகே நகைக் கடைக்கு வந்தனர். நகை வாங்கிவிட்டு அவர்கள் வெளியே வந்தபோது, காரில் வந்த விஜயபானுவின் கணவர் வெங்கடேஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் விஜயமஞ்சுவை இழுத்து காரில் ஏற்றிக்‍கொண்டு கடத்திச் சென்றார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த விஜயபானு, ஓடிச் சென்று காரின் முன்பக்கத்தை கெட்டியாகப் பிடித்து தொங்கியபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்‍கள், விரட்டிச் சென்று கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி அதிலிருந்த விஜயமஞ்சுவை மீட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மேற்கு போலீசார், வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு பெண் ஒருவர் காரின் முன்பக்கத்தில் தொங்கியபடியே சென்று தனது தங்கையை மீட்ட சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00