காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க நள்ளிரவு முதலே குவிந்த பொதுமக்கள் : விடுமுறை நாளையொட்டி மீன்கள் விற்பனை அமோகம்
Jul 3 2022 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விடுமுறை நாளையொட்டி மீன்கள் வாங்க பொதுமக்கள் நள்ளிரவு முதலே அதிகளவில் குவிந்ததால் காசிமேடு மீன் சந்தை களைகட்டியது.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ் கடலுக்கு விசைப்படகுகளில் சென்ற மீனவர்களுக்கு மீன்கள் அதிகளவில் கிடைத்தது. இதனால் காசிமேடு மீன் சந்தையில், வவ்வால், வஞ்சிரம் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை நாள் என்பதால் மீன்கள் வாங்க பொதுமக்கள் நள்ளிரவு முதலே மீன்சந்தைக்கு குவிந்தனர். கடந்த வாரத்தை விட கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விலை அதிகரித்த போதிலும் மீன் பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ஆயிரத்து 300 ரூபாய்க்கும், தேங்காய் பாறை மீன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சிறிய வகை மீன்களான சங்கரா, கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் விற்பனையானது.