உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனம் விபத்துக்குள்ளான விவகாரம் - அத்துமீறி சுற்றுலா வாகனத்தில் பயணிகளை அழைத்துச்சென்ற தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் உதவியாளர் கைது

Jul 3 2022 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் விபத்துக்‍குள்ளான சம்பவத்தில், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடுத்த சோலிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேர் உதகைக்‍கு சுற்றுலா சென்றனர். கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றபோது, 15-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த அவர்களது வாகனம், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் திருநெல்வேலியை சேர்ந்த 24 வயதான முத்துமாரி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 17 பேரும் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விடுதி உரிமையாளர் வினோத்குமார், உதவியாளர் ஜோசப் ஆகியோர், தலைகுந்தா வழியாக கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனத்தை, விதிகளை மீறி குறுக்கு வழியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மற்றும் ஜோசப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00