மனநோயாளியை சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கண்மூடித்தனமாக தாக்கும் கொடூரம் - சமூக வலைதளங்களில் வைரலாகும் திருவாரூர் பேருந்து நிலைய சம்பவம்

Jul 4 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்மூடித்தனமாக மனநோயாளி ஒருவரை தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல காவலர்கள் திரண்டு நின்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் பின்புறம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்துவந்த நிலையில் அந்த வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போலீஸாரிடம் தவறுதலாக பேசியுள்ளார். அப்போது இருசக்கரவாகனத்தை ஓட்டி வந்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து போலீஸாரிடம் எடுத்துகூறியும் அதனை காதில்வாங்கி கொள்ளாமல் அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்கள் ஒன்று திரண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை 5 அடி உயரம் கொண்ட லத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர். காவல்துறையின் இத்தகைய அராஜகபோக்கை தட்டிக்‍கேட்க பயந்த பொதுமக்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00