தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் திட்டம் - கடந்த 10 நாட்களில் 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்திருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

Jul 4 2022 1:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு நிலையம் - ஒரு பொருள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் 7 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் - ஒரு பொருள் திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுவதும் 5 ஆயிரம் ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 23-ம் தேதி முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை வரும் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த எட்டு ரயில் நிலையங்களிலும் கடந்த 10 நாட்களில் 7 லட்சம் வரை பொருட்கள் விற்பனையாகி உள்ளது.

இதனிடையே, வரும் 8-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு ராமேஸ்வரம், விருதுநகர் தென்காசி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் முறையே கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், ஆயத்த ஆடை, காகித பொருட்கள், விவசாய விளை பொருட்கள், மூங்கில் இருக்கைகள், போன்ற பொருட்களை விற்பனை செய்ய விருப்ப மனு அளிக்கலாம் என மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00