மேற்குதிசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்‍காலில் 5 நாட்களுக்‍கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Jul 4 2022 1:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்‍காலில் இன்று முதல் 5 நாட்களுக்‍கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்‍குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாளை முதல் வருகிற 8 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கோவை சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இன்று முதல் வருகிற 8 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக - ஆந்திர கடலோரப்பகுதிகள் வங்கக்கடல் மற்றும் அரபிக்‍கடல் பகுதிகளில் மணிக்‍கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்‍ காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்‍கு செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00