புரட்சித்தலைவரின் பெருமைகளையும், அம்மாவின் அருமைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணத்தை தொடரும் புரட்சித்தாய் சின்னம்மா - புரட்சிப் பயணத்தில் விழுப்புரம், கள்ளக்‍குறிச்சி மாவட்டங்களில் நாளை தொண்டர்களையும், மக்களையும் சந்திக்கிறார்

Jul 4 2022 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் தன்னிறைவு பெறவும், தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்‍களுக்‍கு உணர்த்தவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா நாளை மீண்டும் புரட்சிப் பயணம் மேற்கொள்கிறார். விழுப்புரம் மற்றும் கள்ளக்‍குறிச்சி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கழகத் தொண்டர்களையும், பொதுமக்‍களையும் சந்திக்‍கிறார்.

கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் முகாம் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழகம் தன்னிறைவு பெறவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிடவும், பெண்ணினத்தின் உரிமைகளுக்காகவும் புரட்சித்தாய் சின்னம்மா, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தனது புரட்சிப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவரின் பெருமைகளையும், பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த புரட்சித்தலைவி அம்மாவின் அருமைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக தொடர்ந்து பயணிக்க உள்ளார் - புரட்சிப் பயணத்தை நாளை, மதியம் 2.00 மணிக்கு, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் சென்றடைவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

பின்னர் திண்டிவனம் மன்னார்சாமி திருக்கோயிலுக்கு அருகிலிருந்து தனது புரட்சிப் பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா, பெருமுக்கல் நல்லாளம் கூட்டுரோடு, பிரம்மதேசம், ஆலங்குப்பம், முருக்கேரி, கந்தாடு மற்றும் மரக்காணம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திக்கிறார்.

புரட்சித்தாய் சின்னம்மா, தொடர்ச்சியாக வரும் 7-ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 3.30 மணிக்கு, வானூர் சட்டமன்றத் தொகுதியில் திருச்சிற்றம்பலம் கூட்டுபாதை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வானூர் வட்டாச்சியர் அலுவலகம், ரங்கநாதபுரம், சேமங்கலம், கீழ்கூத்தப்பாக்கம் மற்றும் கிளியனூர் கடைவீதி ஆகிய பகுதிகளில் கழகத் தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்திப்பதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

பின்னர் அடுத்தநாள் அதாவது 8-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 3 மணிக்கு, புரட்சித்தாய் சின்னம்மா, உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிகளில், உளுந்தூர்பேட்டை நகராட்சியிலிருந்து புறப்பட்டு திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட களமருதூர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மற்றும் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அரசூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கழக தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார் -

புரட்சித்தாய் சின்னம்மா, மேற்கொள்ளும் இந்தப் புரட்சிப் பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள், புரட்சித்தலைவியின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், அனைத்தையும் சாதிக்க துடிக்கின்ற இளம்தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, முகாம் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00