அ.ம.மு.க. மாவட்டக்கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் - தென்காசி, மதுரை, தேனி மாவட்டங்களில் வரும் 16 மற்றும் 30, 31-ம் தேதிகளில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

Jul 6 2022 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்காசி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி. தினகரன் தலைமையில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட வாரியான கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம், கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வரும் 16-ம் தேதி தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கான கூட்டம், இலஞ்சியில் உள்ள ரதி மஹாலிலும், மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான கூட்டம், வரும் 30-ம் தேதி அனுப்பானடி ரிங் ரோட்டில் உள்ள ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையத்திலும், தேனி வடக்கு, தெற்கு மாவட்டங்களுக்கான கூட்டம் பி.சி.பட்டியில் உள்ள சந்திரபாண்டியன் திருமண மண்டபத்தில் 31-ம் தேதியும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அந்தந்த கழக மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00