அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு - சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Jul 7 2022 7:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வருகிறது.

சென்னை வானகரத்தில் வரும் 11-ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்‍ கோரி திரு. ஓ.பன்னீர்செல்வம் உள்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் வருகிற 11-ம் தேதி பொதுக்குழுவை கூட்டலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ஆனால் வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை நாளை தாக்கல் செய்வதாகவும், வழக்கை நாளைய தினத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் எனவும் ஒபிஎஸ் தரப்பினர் கோரினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது என தெரிவித்தார். மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என எடப்பாடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதுடன், கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒரு நாள் ஒத்திவைத்தார். இதையடுத்து இந்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00