எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான எஸ்பிகே நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 8 இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை - பல கோடி ரூபாய் நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

Jul 7 2022 8:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

விருதுநகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான செய்யாத்துரைக்கு சொந்தமான எஸ்பிகே நிறுவன அலுவலகம், வீடு உள்ளிட்ட 8 இடங்களில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை மையமாக கொண்டு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே. குழுமம் செயல்பட்டு வருகிறது. எடப்பாடி ஆட்சிக்காலத்தில் அவரது சம்பந்தி மற்றும் மகனுடன் இணைந்து எஸ்.பி.கே. குழுமம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை தொடர்பான ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே. குழுமத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய், ரொக்கம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், எஸ்.பி.கே. குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. எஸ்.பி.கே. குழுமத்தின் நிறுவனர் செய்யாதுரை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜ், பாலசுப்பிரமணியன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோரது வீடுகளிலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை எடுத்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் போரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக தனியார் வங்கி நிர்வாகத்திடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00