புரட்சித்தாய் சின்னம்மா இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதியில் புரட்சிப் பயணம் - கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்
Jul 7 2022 8:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் தன்னிறைவு பெறவும், தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு உணர்த்தவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இன்று விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர் புரட்சிப் பயணத்தை மேற்கொண்டு, கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவரின் பெருமைகளையும், பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்த புரட்சித்தலைவி அம்மாவின் அருமைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் புனித பயணமாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன்தொடர்ச்சியாக இன்று மாலை 3.30 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டமன்றத் தொகுதியில் திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு வானூர் வட்டாச்சியர் அலுவலகம், ரங்கநாதபுரம், சேமங்கலம், கீழ்கூத்தப்பாக்கம் மற்றும் கிளியனூர் கடைவீதி ஆகிய பகுதிகளில் கழகத் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார்.
நாளை மாலை 3 மணிக்கு, புரட்சித்தாய் சின்னம்மா, உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிகளில் கழக தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
புரட்சித்தாய் சின்னம்மா, மேற்கொள்ளும் இந்தப் புரட்சிப் பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள், புரட்சித்தலைவியின் வழியில் தொடர்ந்து பயணிக்கின்ற அனைத்து தாய்மார்கள், அனைத்தையும் சாதிக்க துடிக்கின்ற இளம்தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முகாம் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.