பின் வாசல் வழியாக அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Jul 7 2022 7:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

பின் வாசல் வழியாக அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களை எந்த சூழ்நிலையிலும் பணி வரன்முறைப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிக ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நீண்டகாலமாக பகுதி நேர தொழில்கல்வி ஆசிரியர்களாக பணியாற்றும் தங்களுக்கு பணி நிரந்தரம் கோரி, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களின் மூலமாக நியமிக்கப்பட்ட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர்கள் அனைவரும் தகுதியான கல்வித்துறை அதிகாரிகளால் நியமிக்கப்படாமல், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தேர்வு நடைமுறையை பின்பற்றாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீண்டக்காலம் பணியாற்றியதற்காக பணி நிரந்தரம் கோர முடியாது என்றும், முறையாக நியமிக்கப்படாதவர்களுக்கு பணி நியமன சலுகை வழங்கினால், தகுதியுடன் அரசு வேலைக்காக காத்திருப்போரின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து நியமனங்களும் தேர்வு விதிகளை பின்பற்றியே நடத்தப்பட வேண்டும் என்றும், பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை எந்த சூழ்நிலையிலும் வரன்முறைப்படுத்தக் கூடாது என்றும், பின்வாசல் வழியாக வந்தவர்கள் பின்வாசல் வழியாகவே திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் மனுதாரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு எந்த தடையும் இல்லை கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00