கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை - ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை
Jul 7 2022 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாநகராட்சி பொறியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி கட்டும் மூலம் கோவை மாநகர பகுதிக்கு உட்பட்ட குளக்கரைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேப் போன்று, பூங்காக்கள், சாலைகள், நடைபாதைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி திட்டங்கள் அனைத்தும் முறையாக டெண்டர் விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகராட்சியில் பணியாற்றும், பொறியாளர்கள், முதுநிலை பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்பட பொறியாளர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்ட மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் மற்றும் கோவை மாநகராட்சி மூலம் விடப்பட்ட டெண்டர்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மாநகராட்சி பொறியாளர்களிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகிவுள்ளது. கோவை சுங்கம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையால் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.