பக்ரீத் பண்டிகையையொட்டி மணப்பாறை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி

Jul 7 2022 8:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

பக்ரீத் பண்டிகையையொட்டி திருச்சி மாவட்டம், மணப்பாறை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாயிற்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பக்ரீத் பண்டிகை வரும் 10-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி குர்பானி கொடுப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் ஆடு, மாடு உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரசித்தி பெற்ற திருச்சி மணப்பாறை சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட நாட்டு ஆடுகள், கொடிஆடு, குரும்பை ஆடு, மேச்சேரி ஆடு போன்ற வகைகளை பலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையில் ஆடுகள் விலை போனது. சுமார் ஒன்றரை கோடி ரூபாயிற்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00