கன்னியாகுமரியில் பலத்த சூறாவளி காற்று - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை
Jul 7 2022 8:48AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. குளச்சல் முதல் கீழக்கரை வரை உள்ள தென் தமிழக கடல் பகுதிகளில் மூன்றரை மீட்டர் உயரத்திற்கு ராட்ச அலைகள் எழும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 40-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தங்கள் மீன் பிடி உபகரணங்களை பாதுகாப்பாக கரையோரமாக ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் துறைமுகங்களில் மீன் வியாபாரம் இல்லாததால் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.