ஆவடி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் தகராறு : சமாதானம் செய்ய முயன்ற நபர் மீது தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள்
Jul 7 2022 8:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆவடி அருகே டாஸ்மாக் மதுபானக் கடையில் தகராறு செய்தவர்களைச் சமாதானம் செய்ய முயன்ற நபரை அவர்கள் தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திலகர் தெரு டாஸ்மாக் கடையில் விற்பனை நேரம் முடிந்த பின் ஊழியர்கள் கடையைப் பூட்விட்டுச் சென்றனர். ஆனால் அங்கிருந்த பாரில் அதன் பின்னரும் மது விற்பனை நடைபெற்றதால் அங்கு போதையில் வந்த இளைஞர்கள் மது கேட்டுத் தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு மதுபானம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மதுவிற்றவருடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த மற்றொருவர் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள், சமாதானம் செய்ய முயன்றவரை கடுமையாகத் தாக்கினர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.