ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கு : கோவை மத்திய சிறையில் அதிகாரி விசாரணை
Jul 7 2022 10:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு சிறுமி கரு முட்டை விற்பனை தொடர்பான வழக்கில், மருத்துவ குழுவினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பெண்களிடம், விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமியிடம் சட்ட விரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக காவல் மற்றும் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, சிறுமியின் தாய் மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு ஒரு நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இக்குழுவைச் சேர்ந்த விசாரணை அதிகாரி, சிறையில் இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில், இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விபரங்கள் தனி அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.