ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
Jul 7 2022 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவரும், மக்கள் பிரதிநிதியாக பணியாற்றி, பட்டியல் இன மக்களின் உயர்வுக்காக ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையில் பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தவருமான, திரு.இரட்டைமலை சீனிவாசனின் 163-வது பிறந்த நாளில், அன்னாரது வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.