மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குவியும் வாழ்த்துகள் - தமிழ்த் திரையுலக நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து
Jul 7 2022 11:40AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ள இசைஞானி திரு.இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இசைஞானி திரு.இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட இசைஞானி இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேபோல், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜாவை, கலைச் சாதனைக்காகக் கவுரவிக்க வேண்டுமெனில் ஒருமித்த மனதோடு குடியரசுத் தலைவர் பதவியே கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் எனவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.