நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த ஓசூர் மாணவர் திடீர் தற்கொலை - தேர்வுக்கு படிப்பது கடினமாக இருப்பதாக பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவு

Jul 7 2022 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த ஒரு மாணவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒசூர் அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்த கோபி-மோகன சுந்தரி தம்பதியினரின் மூத்த மகன் முரளி கிருஷ்ணா, கடந்த ஆண்டு பிளஸ் டூ முடித்தார். அதன் பிறகு நீட் தேர்வு எழுதிய அவர், 160 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தார். இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத, வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வந்த அவர், நேற்று மாலை வீட்டிலிருந்த தனது அறைக்குள் சென்று, கதவை பூட்டி கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, அறையினுள் முரளி கிருஷ்ணா, தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், தனக்கு நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் நல்ல மதிப்பெண் பெற முடியாது என்றும், எனவே இந்த முடிவை எடுத்ததாகவும் மாணவர் முரளி கிருஷ்ணா எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00