சென்னை பூந்தமல்லியில் தம்பி வீட்டிலேயே 550 சவரன் நகை திருடிய அண்ணன் - பெண் நண்பருடன் கைது

Aug 8 2022 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தம்பி வீட்டிலேயே 550 சவரன் தங்க நகைகளை திருடிய அண்ணனையும் அவருடன் பழகி வந்த இளம் பெண்னையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள முத்துநகரை சேர்ந்த சேகர் என்பவரும் அவரது தம்பி ராஜேஸ்சும், திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் தாயார் தமிழச்செல்வியும் வசித்து வந்தார். சேகரும் ராஜேஸ்சும், பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்ற சேகரின் மனைவி, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளர். அவர் பீரோவில் வைத்து விட்டு ​சென்ற நகைகளை சரிபார்த்தப் போது 300 சவரன் மாயமானது கண்டு அதிர்சியுற்றார். மேலும் ராஜேஷின் மனைவியின் நகைகள், தாயார் தமிழ்ச்செல்வியின் நகைகள் என மேலும் 200 சவரன் நகைகளும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர், 550 சவரன் நகைகளை திருடியதும் அதை, தான் பழகி வந்த ஸ்வாதி என்ற பெண்ணுக்‍கு கொடுத்ததும் தெரிய வந்தது. தனது மனைவி பிரிந்து சென்ற காலத்தில் ஸ்வாதியுடன் பழக தொடங்கிய சேகர் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி அவருக்‍கு கொடுத்ததுடன் கார் ஒன்றையும் வாங்கி தந்துள்ளார். இது தொடர்பாக சேகர் மற்றும் ஸ்வாதியை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் நகைகளை எங்கே வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00