வரும் 15-ம் தேதி அ.ம.மு.க. செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் : திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் ஆலோசனைக்கூட்டம்
Aug 8 2022 5:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.ம.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15-ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கூட்டத்திற்கு வருகை தரவுள்ள கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலாளர் இ. லக்கி முருகன் தலைமையில், ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அ.ம.மு.க. நிர்வாகிகள் திரு.K.S.கோனேஸ்வரன், திரு.V.நவீன் குமார், திரு. P.R.சாமி, திரு.V.V.கிரிதரன், திரு.N.D.தியாகராஜன், திரு.கராத்தே பாண்டியன், M.R.ரேவதி, திரு.M.வில் விஜயன், திரு.M.முருகன், F.கலைவாணி, திரு.S.V.S.வைரவன், திரு.நிர்மல் குமார், மாயாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.