காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விக்னேஷ் வழக்கில் 6 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவு
Aug 8 2022 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விக்னேஷ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் கைதான 6 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில், மறுநாள் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், தலைமைச் செயலக காலனி சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குமார், முனாப், காவலர் பவுன்ராஜ், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், ஆறு பேரும் ஜாமின் கேட்டு ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், 90 நாட்களை கடந்தும், காவல்துறை விசாரணையை முடித்து குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யாததால் 6 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.