தூத்துக்குடி அருகே சிவகளை அகழாய்வு தொடர்பான ஆய்வுப்பணிகள் - முன்னோர்கள் தங்கம் பயன்படுத்தியது முதன் முறையாக கண்டுபிடிப்பு

Aug 11 2022 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது கண்டெடுக்‍கப்பட்ட முதுமக்‍கள் தாழியில் ஆய்வு செய்தபோது, முதன்முறையாக தங்கம் கண்டு பிடிக்‍கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில், கடந்த 2 ஆண்டுகளாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்ட நிலையில், இதுவரை 40க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்‍கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முதுமக்கள் தாழியை திறந்து முழுமையான ஆய்வு செய்யும் பணி மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறைத்தலைவர் டாக்டர் குமரேசன், அகழாய்வு இயக்குநர் திரு.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் தொடங்கியது. முதுமக்கள் வாழ்விடப் பகுதியாக கருதப்படும் பராக்கிரமபாண்டியில் தோண்டப்பட்ட குழிகளில் சிறிய அளவிலான தங்கப் பொருள், பழங்காலத்தில் நூல் கோர்க்கப் பயன்படும் தக்களி மற்றும் பாசிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00