திருச்சி அருகே அடிப்படை வசதி கோரி திமுக கவுன்சிலரை நாடிய கிராம மக்‍கள் : தேர்தலில் வாக்‍களிக்‍காததால் கவுன்சிலரின் கணவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி அரிவாளை கையில் எடுத்து துரத்தல்

Aug 11 2022 3:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகே தேர்தலில் தனக்கு வாக்களிக்காதவர்களை இடப்பிரச்சனையை காரணம் காட்டி அரிவாளால் கொலை செய்யும் நோக்‍கில் துரத்திய திமுக கவுன்சிலரின் கணவரால் மக்‍கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தமங்கலம் பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன், தளுதாளப்பட்டி கிராமத்தில் கடை வைத்து நடத்திவருகிறார். நேற்று மாலை இதே கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட மூன்று பேர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்து தருமாறு கவுன்சிலர் நித்யாவிடம் கேட்டுள்ளனர், அப்போது கவுன்சிலர் தேர்தலின் போது நித்யாவுக்கு பலர் வாக்‍களிக்‍கவில்லை என்று கூறி கிராம வளர்ச்சிக்காக கோரிக்கை அளிக்க வந்த வந்த மக்களை நித்யாவின் கணவர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் ஆத்திரத்துடன் அரிவாளை கையில் எடுத்துக் கொண்டு அவர்களை கொலை செய்யும் நோக்கில் துரத்திக் கொண்டு ஓடினார். இதனால் அந்த கிராம மக்கள் பலரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். இதனை பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மக்களுக்கு பாதுகாப்பு அற்ற திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என விமர்சித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00