முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்‍கு எதிரான டெண்டர் ஊழல் வழக்‍கு - விசாரணைக்‍கு தடை விதிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Aug 11 2022 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்‍கு எதிரான டெண்டர் ஊழல் வழக்‍கில் விசாரணைக்‍கு தடை விதிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. வேலுமணி சார்பில், கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என்று விடுக்‍கப்பட்ட கோரிக்கைக்‍கு ஆட்சேபம் தெரிவித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, விசாரணை தொடரந்து நடைபெறலாம் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட முடியாது எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00