ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்‍குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் - அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்

Aug 11 2022 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்‍குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதற்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜம்மு காஷ்மீரில் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்‍குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக வரும் செய்தி மிகவும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த பயங்கரவாத தாக்‍குதலில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்‍கும் ராணுவ வீரர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

வீரமரணம் அடைந்த திரு.லட்சுமணன் உள்ளிட்ட மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்‍கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொண்டுள்ளார். வீரமரணமடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00