அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றத்தால் தலையிட முடியாது - பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை அறிவுறுத்தல்

Aug 11 2022 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் மாண்புகளை குறைக்க வேண்டாமென கேட்டுக் கொண்டனர்.

கல்குவாரி அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்பு அகற்றுவது, சாலை அமைப்பது போன்ற பல்வேறு பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம் என்றும், இங்கு வந்து சாலை அமைப்பது கழிவறை கட்ட உத்தரவிடுவது நீதிமன்றத்தின் பணிகள் இல்லை எனவும் தெரிவித்தனர். அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்ற கோரிக்கைகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை அணுகலாம் எனவும் மனுத்தாரர்களுக்கு அறிவுறுத்தினர். பொதுநல வழக்குகள் என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்பையும் கெடுக்க வேண்டாம் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00