கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணியின்போது பூமியிலிருந்து திடீரென வெடித்துச் சிதறிய கற்கள் - சாலை முழுவதும் கற்கள் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு
Aug 11 2022 5:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாநகராட்சிப் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்டபோது, உயர் மின்னழுத்த கம்பி உரசியதால் கற்கள் வெடித்துச் சிதறின. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கோவை மாநகராட்சி காந்தி பூங்கா பகுதியான 24-வது வார்டில், குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புல்டோசர் மூலம் நீளமான குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது, அங்க உயர் அழுத்த மின்வடக் கம்பிகள் இருப்பது தெரியாமல், பாதுகாப்பற்ற முறையில், குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, புல்டோசரின் கைப்பகுதி கீழே உள்ள, உயர் மின்னழுத்த கம்பியை தொட்டதால், திடீரென அந்த இடத்தில் உள்ள கற்கள் வெடித்துச் சிதறி சாலைகள் முழுவதும் கற்கள் பறந்தன. கரும்புகையுடன் கற்கள் வெடித்து சிதறியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு, பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.