தமிழகத்தில் தொடர் விடுமுறை எதிரொலியால் வெளிமாவட்டங்களுக்கு படையெடுக்கும் பயணிகள் : ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வால் பயணிகள் அவதி

Aug 13 2022 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

தொடர் விடுமுறை வரும் நிலையில், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியான திங்கள்கிழமை பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக வருகின்றன. இதையடுத்து சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், குறிப்பாக தென் மாவட்டங்களுக்கும் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு முதல் மூன்று மடங்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்ல ஆயிரம் முதல் ஆயிரத்து 500 ரூபாய்வரை வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயிரத்து 400 முதல் 3 ஆயிரத்து 900 ரூபாய்வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00