தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிப்பு : பொதுமக்கள் கடும் அதிர்ச்ச்சி
Aug 13 2022 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. நேற்று முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் அரசு நிறுவனமான ஆவினை தவிர்த்து பெரும்பாலும் பால் பொருள் தேவைகளுக்கு தனியார் நிறுவனங்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில், தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவது இது 3வது முறையாகும்.