கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாக கருதக் கூடாது : சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

Aug 13 2022 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாக கருதக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

கோவில் சொத்துக்களை இந்து சமய அறநிலைய துறை சொத்துக்களாகவோ; கோவில்களை அறநிலைய துறை கோவில்களாகவோ உரிமை கோர அரசுக்கு தடை விதிக்க வேண்டும். கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை, சம்பந்தப்பட்ட கோவில்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த உத்தரவிட கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, அறநிலையத் துறை சட்டப்படி, கோவில் சொத்துக்களை கோவில் நலனுக்காக, அறநிலையத் துறை ஆணையரின் ஒப்புதல் இன்றி குத்தகைக்கு விட அனுமதியில்லை எனச் சுட்டிக்காட்டியது. மேலும், கோவில் சொத்துக்களை குத்தகைக்கு வழங்க ஆணையருக்கு அதிகாரம் இருந்தாலும், அதுசம்பந்தமாக அறங்காவலர்களின் ஆட்சேபணைகளை கேட்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். கோவில் சொத்துக்களை அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக் கூடாது எனவும், அவற்றை அறநிலையத் துறை சட்டப்படி குத்தகைக்கு அல்லது வாடகைக்கோ விட வேண்டும் என நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00