அக்‍னி தீர்த்த கடற்கரை திடீரென 100 மீட்டருக்‍கு​மேல் உள்வாங்கியது - பவளப்பாறைகள் மீது நடந்து சென்று புனித நீராடிய பக்‍தர்கள்

Aug 13 2022 1:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்‍னி தீர்த்த கடற்கரை திடீரென உள்வாங்கியது. இதனால், வழக்‍கமாக கடற்கரைப் பகுதியில் நீராடும் பக்‍தர்கள், பவளப்பாறைகள் மீது நடந்து சென்று புனித நீராடினர்.

விடுமுறை தினம் என்பதால், ராமேஸ்வரம் கடற்கரையில் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்‍தர்கள் இன்று வருகை தந்தனர். ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடும் அக்னி தீர்த்த கடற்கரை இன்று காலையில், திடீரென 100 மீட்டருக்கு மேல் உள்வாங்கியது. இதனால், கரையிலேயே புனித நீராடும் பக்தர்கள், சற்று தொலைவில் சென்று, பாசிப்படர்ந்த பவளப்பாறைகள் மீது நடந்து சென்று புனித நீராடும் சூழல் ஏற்பட்டது.

பாம்பன் மீன் பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில், இன்று ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பக்‍தர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00