ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலின்போது வீரமரணமடைந்த தமிழக வீரர் லட்சுமணனின் உடல் மதுரையில் உள்ள சொந்த ஊரான புதுப்பட்டிக்கு வந்தது - இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

Aug 13 2022 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்‍குதலில் வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் மதுரையில் அவரது சொந்த கிராமத்துக்‍கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உறவினர்கள், பொதுமக்‍கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணமடைந்தனர். இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணனும் உயிர் தியாகம் செய்தார். அவரது உடல் நேற்று மாலை டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து இன்று காலை ஹைதராபாத் வழியாக அவரது உடல் மதுரை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள இயக்குநர் அலுவலகம் முன்பு மரியாதைக்காக வைக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து லட்சுமணனின் உடல், விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சொந்த ஊரான டி.புதுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், பொதுமக்‍கள் அஞ்சலி செலுத்த வருகின்றனர். இன்று மாலை 4 மணிக்‍கு லட்சுமணனின் உடல் நல்லடக்‍கம் செய்யப்பட உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00