மதுரை: ஆக்‍கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டம்

Aug 13 2022 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை விளக்‍குத்தூண் பகுதியில், ஆக்‍கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலையோர வியாபாரிகள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்குத்தூண், வடம்போக்கிதெரு, கிழக்கு பெருமாள் மேஸ்திரி வீதி ஆகிய பகுதிகளில் சாலைகள் ஆக்கிரமிக்‍கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் மூலம், சாலை ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கீழவாசல் விளக்குத்தூன் சந்திப்பில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஆக்கிரமிப்புகள் எனக்‍ கூறி சாலையோர கடைகளை அகற்றுவதால் வியாபாரிகள் பாதிக்‍கப்படுவதாகவும், உரிய வழிகாட்டுதல்களை வழங்கி கடைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00