நாட்டின் 75-வது சுதந்திர தினம் : தேசியக்‍ கொடிகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலம்

Aug 13 2022 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகள் வித்தியாசமான முறையில் தேசிய கொடிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வருவாய்துறை சார்பில், ஆயிரம் அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடி பேரணி நடைபெற்றது . இந்த பிரம்மாண்ட தேசிய கொடியை, சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கிப் பிடித்துக் கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பாட்டக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 750 தேசிய கொடிகளை ஒரே நேரத்தில் பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகள் ஏற்றி வைத்தனர். மாணவ, மாணவிகளின் இந்த சாதனை, அப்துல்கலாம் பூக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கிய இந்த பேரணி, நான்கு ரோடு, ஐந்து ரோடு, ஜங்ஷன் வழியாக சென்று மீண்டும் ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இந்த பேரணியில் கல்லூரி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தியவாறு பேரணி சென்றனர்.

இதேபோல் பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனங்களின் சார்பாக மனித மூவர்ணக் கொடி உருவாக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூவர்ண நிறத்தில் ஆடை அணிந்து தேசியக்கொடி போல் தரையில் அமர்ந்தனர். இந்த சாதனை நிகழ்வு, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்றது.

கரூர் மாவட்டம் கோடங்கிபட்டி அடுத்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில், கட்டுரைபோட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கல்லூரி விளையாட்டு மைதானத்தில், 100 மீட்டர் அளவுள்ள தேசியக்கொடியை மாணவிகள் தங்கள் கரங்களில் ஏந்திய வண்ணம் விளையாட்டு மைதானத்தில் பேரணி நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00