திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய சோதனை - கைதிகளிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல்
Aug 19 2022 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள
சிறப்பு முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலி பாஸ்போர்ட், சட்ட விரோத குடியேற்றம் என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்த 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாமில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களில் பலர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த மாதம் சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், இதில் தங்கம் கடத்தல் மற்றும் போதை பொருள் கடத்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் மற்றும் விபரங்களை கைப்பற்றினர். இந்நிலையில், தமிழக காவல்துறையினர் இன்று தாமதமாக சிறப்பு முகாமில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இச்சோதனையில் மாநகர காவல் துணை ஆணையர்கள் ஸ்ரீதேவி, அன்பு மற்றும் சுரேஷ் ஆகியோரது தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அதிக செல்போன் பயன்பாடு மற்றும் பணப்புழக்கம் இருந்ததைக் கொண்டு இந்த சோதனை நடைபெற்றதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். சோதனையில் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.