விழுப்புரம் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கில் முக்கிய ஆவணங்கள் மாயம் - வழக்கை விசாரித்து வரும் நீதிபதி அதிர்ச்சி

Aug 19 2022 1:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை கண்டு, வழக்‍கை விசாரித்து வந்த நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழக காவல் துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி., ஒருவர் புகார் அளித்தார். புகாருக்குள்ளான ராஜேஸ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு எஸ்.பி., கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில், சிபிசிஐடி போலீசாரால் சேர்க்கப்பட்டிருந்த செல்போன் உரையாடல் பதிவுகள், வாட்ஸ் அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை கண்டு நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்து நீதிமன்ற ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி புஷ்பராணி, உடனே அந்த ஆவணங்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். காணாமல் போன ஆவணங்களின் வேறு சில நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00