சென்னை ஓட்டேரியில் கோயிலில் இருந்த முருகர், வள்ளி-தெய்வானை வெண்கல சிலைகள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

Aug 19 2022 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஓட்டேரி பகுதியில் கோயிலில் காணாமல் போன முருகர், வள்ளி-தெய்வானை வெண்கல சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியிலுள்ள சுபசெல்வ விநாயகர் கோயிலை கனகசபாபதி என்பவர் நிர்வகித்து வருகிறார். இக்‍கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முருகன், வள்ளி தெய்வானை உள்ளிட்ட வெண்கல சிலைகள் மற்றும் சிறிய உண்டியல் திருடுபோனது குறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளைக்‍ கொண்டு விசாரணை நடத்தி வந்தனர்.

ஓட்டேரி குக்ஸ்ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற நபரை பிடித்து விசாரித்ததில், அவர் சிலைகளைத் திருடியதை ஒப்புக்‍கொண்டதுடன், அவற்றை அயனாவரம் திக்காகுளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, சந்தோஷை கைது செய்த போலீசார், காணாமல்போன வள்ளி தெய்வானை மற்றும் முருகர் சிலைகளை மீட்டனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00