சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 40-க்‍கும் மேற்பட்ட டாஸ்மாக்‍ பார்கள் : ஆர்.டி.​ஐ. மூலம் அதிர்ச்சி தகவல்

Aug 19 2022 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி 40-க்‍கும் மேற்பட்ட டாஸ்மாக்‍ பார்கள் செயல்பட்டு வருவதாக, ஆர்.டி.​ஐ. மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவற்றை திமுகவினர் நடத்தி வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி டாஸ்மாக்‍ பார்கள் இயங்கி வருவதாகவும் இவற்றை திமுகவினர் நடத்தி வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் இது குறித்த உண்மை நிலையை அறிய காரைக்குடியைச் சேர்ந்த நமது உரிமை பாதுகாப்பு இயக்கத் தலைவரும், சமூக ஆர்வலருமான திரு. பிரகாஷ், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விவரங்களை சேகரித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 131 அரசு மதுபான கடைகளில் 40-க்‍கும் மேற்பட்ட பார்கள் அனுமதியின்றி செயல்படுவது ஆர்.டி. ஐ. மூலம் தெரியதுள்ளது. திருப்பத்தூர், சிங்கம்புணரி, மானாமதுரை, திருப்புவனம் வட்டங்களில் ஒரு மதுக்கூடம் கூட அனுமதி பெறவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், அனுமதியின்றி செயல்படும் பார்களை திமுகவினர் சட்டவிரோதமாக நடத்தி வருவதாகவும், இதற்கு அதிகாரிகள் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 40க்‍கும் மேற்பட்ட பார்களை தி.மு.க.வினர் அனுமதியின்றி நடத்தி வருவதால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00