பார்சலில் வாங்கிய பழரசத்தை அருந்திய பள்ளி மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் என கூறி காயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

Aug 19 2022 3:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் பார்சலில் வாங்கிய பழரசத்தை அருந்திய 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி. மகள் லட்சுமிபிரியா. இவர் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி கயத்தாறில் தாயும், மகளும் பார்சல் பழரசம் வாங்கி அதனை குடித்துள்ளனர். மாலையில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இருவரும் முதலில் கயத்தாரில் உள்ள தனியார் மருத்துவமனை, பின்னர் கோவில்பட்டி மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டனர். தொடர்ந்து சென்னையில் உள்ள மருத்துவமனைக்‍கு இருவரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டனர். செல்லும் வழியில் மாணவி லட்சுமி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். சாந்தி தற்போது நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த மாணவி லட்சுமிபிரியாவின் சடலம் உடற்கூறு ஆய்வுக்‍காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் மாணவி லட்சுமிபிரியா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் மாணவி லட்சுமி பிரியாவின் உடலை வாங்க மறுத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00