ராமநாதபுரம் அருகே குழந்தை தலையில் மாட்டிக்‍ கொண்ட பாத்திரத்தை அகற்றிய தீயணைப்புப் படையினர்

Aug 19 2022 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கிளாக்‍குளத்தில் ஒன்றரை வயது சிறுவன் தலையில் மாட்டிக்‍ கொண்ட பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் அகற்றினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கிளாக்குளத்தைச் சேர்ந்த பழனிச்சாமியின் ஒன்றரை வயது மகன் அஜித், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவனது தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்‍ கொண்டது. அதை பெற்றோர் அகற்ற முயற்சி செய்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் பாத்திரத்தை அகற்ற முடியவில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையை, பரமக்குடி தீயணைப்பு துறை நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள், குழந்தை தலையில் இருந்த பாத்திரத்தை அகற்ற முயன்றனர். அரை மணி நேரத்தில், குழந்தையின் தலையில் இருந்த சில்வர் பாத்திரத்தை கட்டர் உதவியுடன் வெட்டி அகற்றினர்.

இதனை தொடர்ந்து பரமக்குடி அரசு மருத்துவமனையில் உடல் நலம் பரிசோதிக்கப்பட்ட பிறகு, குழந்தையை, பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் குழந்தையின் தலையில் மாட்டிய பாத்திரம் அகற்றப்பட்டதை அடுத்து குழந்தையின் தாயும், உறவினர்களும், நிம்மதி அடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00