கோவை அருகே மக்கள் பயன்படுத்தும் பாலில் யூரியா கலந்துள்ளது கண்டுபிடிப்பு : லாரியில் இருந்த யூரியா கலக்‍கப்பட்ட 12,750 லிட்டர் பால் பறிமுதல்

Aug 19 2022 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை அருகே மக்கள் பயன்படுத்தும் பாலில் யூரியா கலந்துள்ளது கண்டுபிடிக்‍கப்பட்டுள்ளது. லாரியில் இருந்த, யூரியா கலக்‍கப்பட்ட 12 ஆயிரத்து 750 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள், பழவகைகள், பால் என அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழக - கேரள எல்லைகளான நடுப்புனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது வழக்‍கம்.

அந்த வகையில், திண்டுக்கல்லில் இருந்து தனியாருக்கு சொந்தமான டேங்கர் லாரியில் பால் ஏற்றி சென்றபோது மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பாலில் கொழுப்பு தன்மைக்காக யூரியா கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, லாரியில் இருந்த யூரியா கலந்த 12 ஆயிரத்து 750 லிட்டர் பால் பறிமுதல் செய்ததுடன், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00