தமிழக-கேரள எல்லையில் காயங்களுடன் சுற்றித்திரியும் காட்டுயானை : 4-வது நாளாக தமிழக வனத்துறையினர் தீவிர தேடுதல்

Aug 19 2022 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை வனப்பகுதியில் மாயமான காட்டுயானையை 4-வது நாளாக வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அடுத்த தமிழக-கேரள எல்லையில் கொடுங்கரை ஆற்றுப்பகுதியில் வாயில் காயங்களுடன் 8 வயதுடைய காட்டுயானை ஒன்று சுற்றித்திரிந்தது. இதையடுத்து அந்த காட்டுயானைக்கு தமிழக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதற்காக கொடுங்கரை ஆற்றுப்பகுதிக்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் அடங்கிய குழு சென்றது. அப்போது, அந்த காட்டுயானை அங்கிருந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றதால், அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், மேட்டுப்பாளையம்-தோலம்பாளையம் வனப்பகுதியில் காட்டுயானை சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலின்படி, வனத்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 4 நாட்களாக, உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ள முடியாத நிலையில், உடல் தளர்ந்து நடக்க முடியாமல் அடர்ந்த வனப்பகுதியில் காட்டுயானை தஞ்சமடைந்திருக்கலாமென தெரிவித்த தமிழக வனத்துறையினர், கேரள வனப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00