ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கருத்து

Sep 27 2022 3:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பது போல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும், வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே இருப்பதால் முழுவதுமாக தடை செய்வது இயலாத காரியமாகவே உள்ளதாகவும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கருத்து தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்‍கல் செய்த மனுவில், தனது மகள் அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ப்ரீ ஃபயர் விளையாட்டு விளையாடியதாகவும் அதில் ஏற்பட்ட பழக்கத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜாப்ரின் என்பவரோடு சென்றிருக்கலாம் என்பதால், தனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கொரோனா ஊரடங்கு காலகட்டம் இளைய தலைமுறைக்கு சோதனை காலகட்டமாகவே அமைந்ததாகவும், ஆன்லைன் வகுப்பு நடைபெற்றபோது இளைய தலைமுறையினர் பலர் மொபைல் மோகத்தில் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியதாகவும் தெரிவித்தனர். இளம் பருவத்தினர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, தனி உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் - நிஜ வாழ்க்கையை ஏற்க மறுக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தாலும், மீண்டும் வெவ்வேறு பெயர்களில் இணையத்தில் அந்த விளையாட்டு வந்து கொண்டே தான் இருக்கிறது -இதனை முழுவதுமாக தடை செய்வது என்பது இயலாத காரியமாகவே உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதுள்ள சூழலில் பெற்றோர்கள், குழந்தைகள் மொபைலில் மூழ்கி ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதே இல்லை - ப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறிப்பதுபோல் உள்ள காட்சிகள் குழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் காணாமல் போன பெண், பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதால் பெற்றோர்கள் தனது மகளை அழைத்துச் செல்லலாம் என்றும், பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படும் வாலிபர் மீண்டும் பெண்ணிற்கு இடையூறு செய்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00